Monday 1 February 2010

ஜனநாயகம்





நாட்டின் முதுகெலும்பாய்...
பெரும்பாலான குடிமக்களின் எல்லைக்கோடாய்..
ஜனநாயகத்தின் சாபக்கேடாய்...
தங்கக்கோடென மின்னி ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறது...
வறுமை கோடு!

மகாத்மா உயிர் உருக்கி வாங்கித்தந்த சுதந்திரம்...
சில அரசியல் ராஜாக்கள்
ஏழை மக்களின் உயிரை உருக்கி...
தேசத்தை கொள்ளையடிக்க மட்டும்
தற்பபோது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது!

காமப்பசியைத் தீர்த்துக்கொள்ள...
பெண்களைத் துகிலுரித்துக்கொண்டிருக்கும்
இரக்கமற்ற துச்சாதணன்களைப் பெற்றுவிட்டோமேயென்று
அழுது அழுது கண்ணீரெல்லாம் வற்றி...
வரண்டப் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறாள்...
பாரதத் தாய்!

ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லை...
பல ஏழைகளின் குடும்பத்தில்!
பல கோடிகளுக்குச் சண்டை நடக்கிறது...
சில அரசியல் புனிதர்கள் குடும்பத்தில்!

கோடிகளுக்கு எத்தனைப் பூஜ்ஜியங்களென்றே தெரியாமல் ...
உழைத்து உழைத்து...
தண்டு வலைந்துப்போன நெற்கதிர்களுக்கிடையில்
சில கோடிகள் சேமிப்பில் குறைந்ததென்று...
அடிவயிற்றிலிருந்து அலறிக்கொண்டு ஓடிக்களிக்கின்றன...
சிலச் சுயநலப் பெருச்சாலிகள்!

அரசியல் நரிகளாய் மாறி...
ஏழை மக்களை ஏமாற்றி...
பணத்தையும் மானத்தையும் பறிக்கும் யுக்தியை...
முடிந்தால் அவர்களை...
வாழவைக்கப் பயன்படுத்துங்கள்!

ஜன நியாயமானத் தேவைகள் நிறைவேறுமென்று நம்பி...
பெற்றோர்க்குக்கூடப் பணிவிடைச் செய்யாது...
தொண்டர்களாகி...
கைகளாலும், கால்களாலும் சேவைகள் புரிந்து...
அரசியல் சிம்மாசனத்தில் உங்களையேற்றிவிட்ட...
அந்த ஏணிப்படிகளைப் பத்திரப்படுத்தி வைக்கவேண்டாம்...
நொறுக்காமலாவது இருக்கலாமல்லவா?!!

ஜனங்களின் நாயகன்களாக இல்லாவிட்டாலும்
ஜனங்களிடம் நயமாகயிருக்கவாவது...
எள்ளளவு முயற்சிச்செய்யுங்கள்!
கால தேவன் மனமிரங்கி...
உங்களின் பாவக்கணக்கில்...
சிறிதேனும் தள்ளுபடிச் செய்ய...
வழிக்காட்டுங்கள்!!!


3 comments:

  1. டார் டாராக்கிட்டீங்க...

    ReplyDelete
  2. "ஜன நியாயமானத் தேவைகள் நிறைவேறுமென்று நம்பி...
    பெற்றோர்க்குக்கூடப் பணிவிடைச் செய்யாது...
    தொண்டர்களாகி..." மிகவும் அருமை.
    அது கடவுளா கல்லடா! ஆனாலும் தலைவர் சிலைக்கு மாலை போட்டு
    என்னை காணவா என்றால் ஒரு படி மேலே போய்
    கற்பூரமும் காட்டுகிறாய்.
    நாங்கள் கண்ணைத்தான் மூடிகொண்டோம்
    தொண்டனையும் காணாதவாறு குத்தியும்விட்டோம்!
    வாருங்கள் என் சந்ததியினருக்கு இன்னும்
    கோடிகோடி சேர்க்க தீயும் குளியுங்கள்.
    உங்கள் குழந்தைக்கு நாங்கள்
    சூரியன் என்று பெயர் வைக்கிறோம்.

    ReplyDelete