Tuesday, 2 February 2010
என் கனவுத் தோட்டத்தில்
புவி காணா அழகு
கவி புகழா அற்புதம்
கண் சிமிட்டியது...
ஓர் அபூர்வ மலர்!
அடி மேல் அடி வைக்க...
இதயப் பாலைவனம்
சோலைவனமானதை...
என்னென்று சொல்ல?!!
வார்த்தைகளின்றி வறண்ட இதழ்கள்...
இமை அணை மீறிய விழிகள்...
உயிருக்கும் மெய்யுக்கும் யுத்தம்...
முன்னறிவிப்பில்லா மாற்றங்கள்?!!
அருகில் வந்தது இன்பம்...
வருடியது ஆனந்தம்...
புறமிருந்து அகம் வழுவியது வரம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
//புவி காணா அழகு
ReplyDeleteகவி புகழா அற்புதம்//
ஓஹ் அம்புட்டு அழகா? ம்ம்...
//புறமிருந்து அகம் வழுவியது வரம்//
ReplyDeleteகடைசி வரியில் உள்ளத்தை தொட்டுவிட்டீர்கள்.