Tuesday 6 March 2012

கணக்கு


மூன்று பாகமென...
வகுத்தேன்...
உன்னை.. 

முதல் பாகம்
கொண்டு..
கவர்ந்தாய் என்னை... 

இரண்டாம் பாகம்
கண்டு...
மலைத்தேன் பெண்ணே...

மூன்றாம் பாகம்...
காண...
வரம் தர வா...
தேனே!!!

உறக்கம்


மாலை நேரத்து
சூரியன்...
நிழல் பதித்தது...
இரவு நேரத்து
வெண்ணிலவாக!

சுவாரசியமில்லை...

மாலை நேரத்து
சந்திப்பு...
நிழல் பதித்தது...
உன் பிம்பங்களாக
இரவு நேரத்து...
என் கனவில்!

ஆரவாரமாக....!!!

உன்னால்


கார்முகில் நிறுத்திவிட்டதாம்...
உன் கருங்கூந்தல்..
நீந்துவதைக்கண்டு! 

கருவண்டு நிறுத்திவிட்டதாம்...
உன் விழிகள்..
விளையாடுவதைக்கண்டு! 

செந்தாமரை நிறுத்திவிட்டதாம்...
உன் இதழ்கள்...
விரியக்கண்டு! 

நீலமயில் நிறுத்திவிட்டதாம்...
உன் பாதங்கள்..
அசைவதைக்கண்டு! 

மேலே சொன்னது...
சில மாறுதல்கள்...
உள்ளே நடக்கிறது..
பேரழிவுகள்!!

கற்பம்


வெள்ளிரதமொன்று
ஆடைப்பூண்டு வந்தது
என் அருகில்
பள்ளியறை வாசம் செய்ய... 

ஜன்னலோரம் வெண்ணிலாக்காய...
என் கண்ணோரம் தேன்பலா
வந்து நின்றது நாணம்காய...
அழைப்புவிடுத்தது...
இன்பத்தில்தோய! 

ஆனந்தத் தாண்டவமாட
வேண்டாமே ஆடை...
ஒரு குடையென
எடுத்துடுத்தவா என்னை
காத்திருக்கிறேன் உன்னை... 

அரங்கத்தை...
திரைக்கொண்டு மூடினால்...
அரங்கேற்றம் எங்கே செய்வதுப்பெண்ணே?
அக்னியில் நான்குளிக்க...
மழையெனவா இன்னே!


இதோ தொடங்கப்போகிறேன்...
ரதியின் ஓவியக் கண்காட்சி...
என்னுளிருக்கும் மன்மதனுக்காக...
நன்றிதெரிவித்துவிட்டேன்...
படைத்த பிரம்மனுக்காக!


இடையினம் கவரும் பட்டு வேண்டாம்...
அதைத்தாங்கும்...
சுமைத்தாங்கியும் வேண்டாம்...
மெல்லினங்களை...
விடுதலைச்செய்ய...
காப்புகள் வேண்டாம்!


வேண்டாமென்று எடுத்தப்பொருள்களுக்குள்...
வேண்டுமென்றிருக்கும் அர்த்தங்கள்தான் எத்தனை....
உயிருள்ள ஓவியமென்று
நினைத்தேன் உன்னை...
உயிரெடுத்து உயிர்க்கொடுக்கும்காவியமென...
அனைக்கவா...அணைக்கவா...
என்னை!!


தனிமை


நேரமாகிறது...
காத்திருக்கிறேன்...
திருப்பி அனுப்பிவிடுவாயென
உன்னோடுத் தங்கிவிட்ட
என் நிழலுக்காக!!

Friday 2 March 2012

உறக்கம்


மாலை நேரத்து
சூரியன்...
நிழல் பதித்தது...
இரவு நேரத்து
வெண்ணிலவாக!

சுவாரசியமில்லை...

மாலை நேரத்து
சந்திப்பு...
நிழல் பதித்தது...
உன் பிம்பங்களாக
இரவு நேரத்து...
என் கனவில்!

ஆரவாரமாக....!!!

Thursday 1 March 2012

உன்னால்


கார்முகில் நிறுத்திவிட்டதாம்...
உன் கருங்கூந்தல்..
நீந்துவதைக்கண்டு! 

கருவண்டு நிறுத்திவிட்டதாம்...
உன் விழிகள்..
விளையாடுவதைக்கண்டு! 

செந்தாமரை நிறுத்திவிட்டதாம்...
உன் இதழ்கள்...
விரியக்கண்டு! 

நீலமயில் நிறுத்திவிட்டதாம்...
உன் பாதங்கள்..
அசைவதைக்கண்டு! 

மேலே சொன்னது...
சில மாறுதல்கள்...
உள்ளே நடக்கிறது..
பேரழிவுகள்!!