Monday 1 February 2010

ரணங்கள்

உன் நிழலை மட்டும் தான்
உன்னால் கொண்டுச்செல்ல முடியும்
என்னிடமிருந்து...
உன் நினைவுகளை அல்ல!

என் இதயத்தைத்தான்...
எடுத்துச் செல்கிறாய்!
உன் ஈரமற்ற இதயத்தைத்தான்
என்னிடம் அடகு வைத்துவிட்டாயே
நீ காதலித்தக் காலங்களில்!

நீ அடகுதான் வைத்தாயென்று அறியாமலேயே...
எனக்குப் பரிசாகக் கொடுத்தாயென்று
இந்த நிமிடம் வரை...
நான் தான்...
அதை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன்!

இறுதியாக...
நான் கேட்காத வட்டியாக...
நினைவுகள் என்னும் ரணங்களை...
எனக்கு கொடுத்துவிட்டுப் போகிறாய்...
கடன் தீர்ந்ததென்று!

நீ...
எங்கு வேண்டுமானாலும் போ!
ஆனால்...
என்னைப்போல் யாருக்கும்...
கடனாளியாகிவிடாதே!

1 comment:

  1. கடனாளியாக்கிவிடாதேவா? கடனாளியாகிவிடாதேவா?

    ஒரெழுத்து க் மட்டும் வித்யாசம் அர்த்தமே மாறிடுது

    காதலி மாறிவிடமாட்டாளா என்ன?

    ReplyDelete