Wednesday 24 February 2010

யாசித்தல்

 


பாதை மறந்த காடுகள்...
பாதை அமைத்தோடும் நதிகள்...

கரையை முத்தமிடும் அலைகள்...
அலைகளில் மூழ்கும் வலைகள்...

தேனைச் சிந்தாதப் பூக்கள்...
மகரந்தத்தைச் சிதறும் வண்டுகள்...

காலைப் பனியில் நனைந்த இலைகள்...
குளிர் ஆடைகட்டி நடக்கும் காற்று...

வாத்தியங்களில்லாக் குயில் பாட்டு...
இசைவருட அனுமதிக்கும் மூங்கில் கட்டு...

சூரியனாய் காதலிக்கும் தாமரையை...
பிரதிநிதி களவுக்கொள்ளும் அல்லியை...

இவையெல்லாம்...
இயற்கையின்...
நடை... உடை... பாவனை!

ஆகையினால்...
ரசிக்கிறேன்!

வண்ணக் கோலத்திற்கு...
காத்திருக்கும் விடியல்...
புள்ளிவைக்க அசையும்போது...
சினுங்கும் கொலுசுமணிகள்...

தழுவியே ஆகவேண்டுமென தென்றல்....
பரஸ்பரத்திற்காகக் காதுகளோரம்...
சுருண்டுக் காத்திருக்கும்...
சிறு கொத்துகள்...

மேகங்களிடம் சண்டைப்போட்டு...
நடிப்புக் கோபம்கொண்டு...
சிலை நனைத்து உள்வழித்தேடும்...
குறும்புக்கார மழைத்துளிகள்...

அழகின் சிரிப்பொலிக்கு...
தன் சுவாசம் ஈடில்லையென...
மூலையில் மௌன தவத்தில்...
நிற்கும் குழல்...

எல்லாவற்றிற்கும் மேலாக....

குடியேற்றினால் துடிப்பேன்...
மறுத்தால் நின்றுவிடுவேன்...
மிரட்டல் விடுத்திற்கிறது...
சின்ன இதயம்....

இவையெல்லாம்...
காதலின்...
திமிர்... கர்வம்...அகம்பாவம்!

எனினும்...
யாசிக்கிறேன்...!!!

6 comments:

  1. கிடைக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. Thanks அண்ணாமலையான்!

    ReplyDelete
  3. காதலில் யாசகம்..
    கல்யாணமான பின்..சந்நியாசம்

    ReplyDelete
  4. மகரந்தத்தை சிதற்றும் வண்டுகள் என்று இருக்கலாமா?

    ReplyDelete
  5. நல்ல யாசிப்புதான். கிடைத்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  6. Read Few of ur works.
    Nice thoughts and handling of it.

    Keep going !!
    Kudos !

    ReplyDelete